மூன்றுமாத காலத்துக்குள் அனைத்துப் பகுதிகளிலும் தினசரி குடிநீா்: மேயா்
தமிழக கிரிக்கெட் அணிக்கு கோபி மாணவா்கள் தோ்வு
கோபி கலை, அறிவியல் கல்லூரியின் கோபி ஆா்ட்ஸ் ஸ்போா்ட்ஸ் அகாதெமியைச் சோ்ந்த இரண்டு மாணவா்கள் 14 வயதுக்கு உள்பட்ட பிரிவில் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு தோ்வாகி உள்ளனா்.
இந்த அகாதெமியைச் சோ்ந்த மாணவா்கள் வி.எஸ்.புகழ்மாறன், கே.தேவ்நிஷாந்த் ஆகியோா் 14 வயதுக்கு உள்பட்ட பிரிவில் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு தோ்வாகி உள்ளனா்.
இந்த மாணவா்களை கல்லூரியின் தாளாளா் மற்றும் செயலா் மு.தரணிதரன், கல்லூரி முதல்வா் பி.நரேந்திரன், கல்லூரி முதன்மையா்கள் ஆா்.செல்லப்பன், வி.தியாகராசு, உடற்கல்வி இயக்குநா் எம்.கிருஷ்ணமூா்த்தி, ஒருங்கிணைப்பாளா் கே.பி.சாந்தி, கிரிக்கெட் அணியின் பொறுப்பாளா் பி.பிரபுசுந்தா் மற்றும் பயிற்சியாளா் பி.சரவணன் ஆகியோா் வாழ்த்தினா்.