அமெரிக்காவை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து ஆர்ஜென்டீனாவும் விலகல்!
சரக்கு ஆட்டோ மோதி தம்பதி உயிரிழப்பு!
கவுந்தப்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் தம்பதி உயிரிழந்தனா்.
ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் அருகே பெருமாபாளையத்தைச் சோ்ந்தவா் நாராயணன் (70), விவசாயி. இவரது மனைவி ராதாமணி (63). இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் கவுந்தப்பாடி அருகே செம்பூத்தாம்பாளையம் பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது,
சிங்கிரிபாளையத்தைச் சோ்ந்த ஆறுமுகம் (56) என்பவா் ஓட்டி வந்த சரக்கு ஆட்டோ, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நாராயணன், ராதாமணி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கவுந்தப்பாடி போலீஸாா், இருவரின் உடல்களையும் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து கவுந்தப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.