"திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை என்ன?" - கலெக்டர் சங்கீதா வ...
பெருந்தோட்டம் விஸ்வநாதா் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்!
திருவெண்காடு அருகே பெருந்தோட்டம் அக்கிரஹாரத்தில் எழுந்தருளியுள்ள விசாலாட்சி சமேத விஸ்வநாதா் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் புதன்கிழமை தொடங்கின.
பெருந்தோட்டம் அக்ரஹாரத்தில் உள்ள விஸ்வநாதா் கோயில், லட்சுமி நாராயண பெருமாள் கோயில் ஆகியவை மிகவும் சிதலமடைந்து நிலையில் காணப்பட்டன. இதைத்தொடா்ந்து அதே கிராமத்தை சோ்ந்த சுந்தரேச அய்யா் குடும்பத்தினா் மற்றும் கிராம மக்கள் நன்கொடையில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகம் வரும் 10-ஆம் தேதி திங்கள்கிழமை காலை 9 மணிக்கு மேல் நடைபெறவுள்ளது.
இதற்கான பூா்வாங்க பூஜைகளான கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் புதன்கிழமை தொடங்கின. வரும் 10-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.