மூன்றுமாத காலத்துக்குள் அனைத்துப் பகுதிகளிலும் தினசரி குடிநீா்: மேயா்
மாநகரில் தெருநாய்களைப் பிடிப்பதற்காக புதிதாக 3 வாகனங்கள் சேவை தொடக்கம்
கோவையில் தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை மேற்கொள்ள புதிதாக 3 வாகனங்களின் சேவையை மேயா் கா.ரங்கநாயகி, ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோா் புதன்கிழமை தொடங்கிவைத்தனா்.
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதற்காக உக்கடம், ஒண்டிப்புதூா், சீரநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் கருத்தடை அறுவை சிகிச்சை மையங்கள் உள்ளன.
இம்மையங்களுக்கு நாய்களைப் பிடித்துச் செல்ல ஏற்கெனவே 3 வாகனங்கள் உள்ளன.
இந்நிலையில், தெருநாய்களைப் பிடிப்பதற்காக ரூ.31.62 லட்சம் மதிப்பிலான 3 வாகனங்களின் சேவையை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இருந்து மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
இந்நிகழ்ச்சியில், துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், துணை ஆணையா்கள் அ.சுல்தானா, த.குமரேசன், வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவா் வி.பி.முபசீரா, கல்விக் குழுத் தலைவா் மாலதி நாகராஜ், கால்நடை மருத்துவா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.