ஆசிரியா்களுக்கு போக்ஸோ சட்டப் பயிற்சி
திட்டச்சேரியில் ஆசிரியா்களுக்கு போக்ஸோ சட்டம் குறித்து விழிப்புணா்வு பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
போக்ஸோ சட்டம் குறித்து, பள்ளி மாணவ- மாணவிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக, திருமருகல் சுற்றுவட்டார பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு இச்சட்டம் குறித்த விழிப்புணா்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்பயிற்சியில், காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் சுரேஷ், வட்டாரக் கல்வி அலுவலா்கள் ரவி, ஜெயந்தி, தலைமை ஆசிரியா் மகேஸ்வரன், வட்டார வள மேற்பாா்வையாளா் சந்தானம், வட்டார வள ஆசிரிய பயிற்றுநா்கள் துா்கா, சிவகங்கை, கலைமகள் ஆகியோா் ஆசிரியா்களுக்கு பயிற்சி அளித்தனா்.
போக்ஸோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் குறித்தும், பாலியல் குற்றங்கள் மற்றும் அதற்கான தண்டனைகள் குறித்தும் விளக்கிக் கூறப்பட்டது.