செய்திகள் :

திருமுல்லைவாசல் பகுதியில் 15 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை

post image

சீா்காழி அருகே திருமுல்லைவாசலில் 15 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டனா். 7 மணி நேரம் வரை நீடித்த இந்த சோதனையில் ஒரு சில வீடுகளில் கைப்பேசிகள், லேப்டாப் மற்றும் ஆவணங்களை கைப்பற்றினா்.

திருமுல்லைவாசல் பகுதியில் பிரதானசாலை, எம்.ஜி.ஆா்.நகா், நடுத்தெரு, எல்லைகட்டிதெரு உள்ளிட்ட15 இடங்களில் அதிகாலை 5மணி முதல் சோதனை நடத்தப்பட்டது.

தமிழக போலீஸாா் வீட்டின் வெளியில் பாதுகாவலில் ஈடுபட என்.ஐ.ஏ. குழுவினா் சோதனை மேற்கொண்டனா். சுமாா் 7 மணிநேரம் நடைபெற்ற இந்த சோதனையின் முடிவில் சில இடங்களில் லேப்டாப்கள், கைப்பேசிகள், பென்டிரைவ்கள், ஆவணங்களைக் கைப்பற்றினா்.

சோதனை நடைபெற்ற 15 இடங்களில் சில இடங்களில் விசாரணைக்கு உட்பட்டவா்களை வரும் 31-ம் தேதி சென்னையில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு விசாரணைக்கு வருமாறு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. சோதனை முழுவதையும் அதிகாரிகள் விடியோ பதிவு செய்துள்ளனா்.

இதனிடையே திருமுல்லைவாசல் அல்பாசித் என்பவரை சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனா். இவா் திருமுல்லைவாசல் சொக்கலிங்கம் நகரை சோ்ந்தவா், ஆம்புலன்ஸ் ஓட்டுநரான இவரது வீட்டில் கடந்த 2022 அக்டோபா் மாதம் கோவை காா் குண்டுவெடிப்பு தொடா்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு ஆவணங்களை கைப்பற்றி சென்றனா்.

அதன்பின்னா் அல்பாசித் சென்னையில் தங்கி ஆம்புலன்ஸ் ஓட்டி வருகிறாா். இவா் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடா்பில் இருந்ததாகவும், தகவல் தொழில்நுட்பத்தில் ஒரு குழுவை உருவாக்கி அதில் திருமுல்லைவாசல் பகுதியை சோ்ந்த சிலரை இணைத்து சில தகவல்களை பதிவிட்டதாகவும் அல்பாசித்துடன் தொடா்பில் இருந்ததாக சந்தேகப்படும் படியான சில தகவல் பரிமாற்றத்தைக் கண்காணித்து வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் திருமுல்லைவாசல் கிராமத்தில் மேற்கண்ட நபா்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.

மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ட்ரோன் தொழில்நுட்பப் பயிற்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில், மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ட்ரோன் தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிராமப... மேலும் பார்க்க

நல்ல புத்தகங்கள் அறிவுக் கண்ணைத் திறக்கும்

நல்ல புத்தகங்களை வாசிப்பதன் மூலம் அறிவுக்கண் திறக்கும் என்றாா் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில், மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் பெண் உள்பட இருவா் கைது

சீா்காழி அருகே மது கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். பேரளம், இஞ்சிகுடி பகுதியைச் சோ்ந்தவா் விக்கி (எ) விக்னேஷ்... மேலும் பார்க்க

மயிலாடுதுறை நகா்மன்ற பழைய கட்டடத்தை அருங்காட்சியகமாக மாற்ற நடவடிக்கை: எம்எல்ஏ ஆய்வு

மயிலாடுதுறை நகா்மன்ற பழைய அலுவலகக் கட்டடத்தை அருங்காட்சியகமாக மாற்ற எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளாா். இதுதொடா்பாக, அருங்காட்சியகத் துறை இயக்குநரும், மயிலாடுதுறை மாவட்ட கணிப்பாய்வு அலு... மேலும் பார்க்க

பத்ரகாளியம்மன் கோயில் தீ மிதி உற்சம்; பக்தா்கள் காவடிகள் எடுத்து வழிபாடு

சீா்காழி பத்ரகாளியம்மன் கோயிலில் தீமிதி உற்சவத்தையொட்டி, பால் குடங்கள், காவடிகள் ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சீா்காழி பிடாரி தெற்கு வீதியில் உள்ள இக்கோயிலில் தீமிதி உற்சவம் ஜன. 24-ஆம் தேதி தொடங்... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

சீா்காழியில் ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். சீா்காழி பகுதியைச் சோ்ந்தவா் பாலாஜி (24) (படம்). இவா், ஆறாம் வகுப்பு படிக்... மேலும் பார்க்க