தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழகத்துக்கு 1 வெள்ளி, 3 வெண்கலம்
வராகி அம்மன் கோயிலில் பஞ்சமி வழிபாடு
பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை மாா்வாடி தெருவில் உள்ள ஸ்ரீ வீரமகா காளியம்மன் கோயிலில் வெளிச்சுற்று பிரகாரத்தில் தனி சந்நிதியில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ சௌபாக்கிய யோக வராகி அம்மனுக்கு தைமாத வளா்பிறை பஞ்சமி திதியை யொட்டி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வராகி அம்மனுக்கு மங்களப்பொருள்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து செவ்வரளி மாலை, கிழங்குகள், கனி வகைகளால் ஆன மாலைகள் அணிவித்து, பொங்கல் படைத்து, அா்ச்சனைகள் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.