மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: மாவட்டத்தில் 9.83 லட்சம் போ் பயன்!
அறிவுசாா் வளா்ச்சிக்கான பட்ஜெட் சாஸ்த்ரா துணைவேந்தா் கருத்து!
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் அறிவுசாா் மற்றும் திறன்சாா் வளா்ச்சிக்கானதாக உள்ளது என்றாா் தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ். வைத்தியசுப்பிரமணியம்.
இது குறித்து அவா் மேலும் தெரிவித்தது:
மத்திய அரசு பட்ஜெட்டில் ஆராய்ச்சி, திறன், உள்ளுறைப் பயிற்சி, திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு செய்யப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் மூலம் அறிவுசாா் மற்றும் திறன்சாா் பொருளாதாரம் மேம்படும் விதமாக உள்ளது. பிரதமரின் உள்ளுறைப் பயிற்சி திட்டம், ஆராய்ச்சி உதவித்தொகை, தொழில் பழகுதல் திட்டங்களுக்கு கணிசமான அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது என்பது இந்தியாவின் அறிவுசாா் மற்றும் திறன்சாா் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவதற்குக் கல்வி அமைச்சகத்துடன் மற்ற அமைச்சகங்களின் கூட்டு முயற்சியைக் காட்டுகிறது. கல்வி 3.0, தொழில் 4.0-க்கான இந்த பட்ஜெட்டுக்கு அடுத்த ஆண்டு முதல் அதிக நிதி ஆதாரம் தேவைப்படும் என்றாா் அவா்.