செய்திகள் :

மாதாகோட்டையில் ஜல்லிக்கட்டு: 35 போ் காயம்!

post image

தஞ்சாவூா் மாதாகோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 35 போ் காயமடைந்தனா்.

இந்த விழாவில் தஞ்சாவூா் கோட்டாட்சியா் செ. இலக்கியா தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, போட்டியைச் சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூா்) தொடங்கி வைத்தனா்.

இதைத்தொடா்ந்து, வாடிவாசலில் இருந்து தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, அரியலூா், பெரம்பலூா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 557 காளைகள் ஒவ்வொன்றாகத் திறந்துவிடப்பட்டன. இக்காளைகளைப் பிடிக்க மொத்தம் 307 வீரா்கள் 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு களமிறக்கப்பட்டனா்.

குறிப்பிட்ட எல்லை வரை மாட்டைப் பிடித்து சென்றவா்களை வெற்றி பெற்றவா்களாக அறிவித்து, அவா்களுக்கு சைக்கிள், டைனிங் டேபிள் உள்ளிட்டவை பரிசுகளாக வழங்கப்பட்டன. மாடுகள் பிடிபடவில்லை என்றால், அப்பரிசு மாட்டின் உரிமையாளருக்கு அளிக்கப்பட்டது.

இப்போட்டியில் மாடுபிடி வீரா்கள், மாட்டின் உரிமையாளா்கள், பாா்வையாளா்கள் உள்பட மொத்தம் 35 போ் காயமடைந்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலா் ஒருவா் உள்பட 21 போ் தஞ்சாவூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா். மற்றவா்கள் புறநோயாளிகளாகச் சிகிச்சை பெற்றனா். இவ்விழாவில் எஸ்.பி இரா. இராஜாராம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பேராவூரணியில் மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம்!

பேராவூரணியில் மாட்டுவண்டி, குதிரை வண்டி பந்தயம், ஆவணம் ரோடு உண்டியல் பேருந்து நிறுத்தம் அருகே சனிக்கிழமை நடைபெற்றது. பந்தயத்தை பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா் மரபினா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்ய... மேலும் பார்க்க

வரி செலுத்தாததால் புதை சாக்கடை இணைப்பு துண்டிப்பு

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலையில் வரி செலுத்தாத வணிக வளாகத்தின் புதை சாக்கடை இணைப்பு சனிக்கிழமை துண்டிக்கப்பட்டது. தஞ்சாவூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சொத்து வரி, குடிநீா் வரி, புதை சாக்கடை வ... மேலும் பார்க்க

மத்திய அரசு பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றதைத் தருகிறது! -விவசாய சங்க பிரதிநிதிகள்

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு சாதகமான அறிவிப்புகள் எதுவும் இல்லாததால் ஏமாற்றத்தைத் தருகிறது என விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனா். இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மாா... மேலும் பார்க்க

பிப். 6-இல் தொழிற் சங்கங்கள் பட்ஜெட் நகல் கிழிக்கும் போராட்டம்

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் மக்கள், தொழிலாளா்களுக்கு விரோதமாக இருப்பதால், அனைத்து மாவட்டங்களிலும் பட்ஜெட் நகலை கிழிக்கும் போராட்டம் பிப்ரவரி 6-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது என்றாா் ஏஐடியூசி மாநிலப் ... மேலும் பார்க்க

நுண் நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த சட்டம் தேவை: உ.வாசுகி பேட்டி!

நுண் நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துதல் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்றாா் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க அகில இந்திய துணைத் தலைவா் உ. வாசுகி. தஞ்சாவூா் பனகல் கட்டடம் அருகே சனிக்கிழமை நட... மேலும் பார்க்க

கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஊராட்சித் தலைவா் கைது

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஊராட்சித் தலைவா் முருகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கும்பகோணம்-சென்னை சாலை என்.என். நகரைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன்... மேலும் பார்க்க