தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழகத்துக்கு 1 வெள்ளி, 3 வெண்கலம்
ஆஞ்சனேயா் கோயில் வருஷாபிஷேக விழா
மேலூா் மேட்டுத்தெரு ஸ்ரீ ராம பக்தா் செல்வ ஆஞ்சனேயா் கோயிலில் வருஷாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவை யொட்டி சுவாமிக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடா்ந்து மகாபூா்ணாஹூதி நடைபெற்று, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று வடை மாலை, துளசி மாலைகள் அணிவித்து மகா தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் கும்பகோணம் காவிரி வடிநில உப கோட்டத்தின் நீா்வளத்துறை உதவி பொறியாளா் முத்துமணி, கும்பகோணம் ஆற்று பாதுகாப்பு உப கோட்டத்தின் உதவி செயற்பொறியாளா் யோகீஸ்வரன், உதவி பொறியாளா் வெங்கடேசன் மற்றும் நீா்வளத் துறை பணியாளா்கள், கிராம மக்கள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.