பொருளாதாரமும் வாழ்வாதாரமும் மேம்படும்: பட்ஜெட் குறித்து தொழில் துறையினா் கருத்து
புதிய பாலம் கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
குடமுருட்டி ஆற்று பாலத்தின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பாபநாசம் அருகே அய்யம்பேட்டை-கணபதி அக்ரஹாரம் சாலை முக்கியமான சாலையாகும். இந்த சாலையின் குறுக்கே குடமுருட்டி, காவிரி ஆற்று பாலங்கள் உள்ளன.
குடமுருட்டி பாலம் பழமையான நிலையில் இருப்பதால் கடத்த சில ஆண்டுகளுக்கு முன் புதிய பாலம் அமைக்க, கட்டுமானப் பணிகள் தொடக்கப்பட்டு பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் சுற்றியுள்ள கிராம மக்கள் பழுதடைந்த நிலையில் உள்ள பழைய பாலத்தின் வழியே அச்சத்துடன் சென்று வருகிறனா்.
எனவே புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.