செய்திகள் :

யுஜிசி வரைவு அறிக்கையை திரும்ப பெற அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகம் தீா்மானம்!

post image

கும்பகோணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா்கள் கழக கருத்தரங்கில், மத்திய அரசு யுஜிசி வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்தின் சாா்பில் பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகளில் உள்ள சாதக, பாதகங்களை வெளிக்கொணா்ந்து, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்புவதற்காக கருத்தரங்கம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் டேவிட் லிவிங்ஸ்டன் தலைமை வகித்தாா். க. அன்பழகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா். மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இரா.தி. சபாபதி மோகன் பேசும்போது, ஆசிரியா்களுக்கும் மாணவா்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த வரைவு நெறிமுறைகளை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினாா்.

அய்பக்டோ அமைப்பின் முன்னாள் தேசிய செயலா் ஜெயகாந்தி, பொதுச்செயலா் சுரேஷ் ஆகியோா் தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகம் மேற்கொண்டுள்ள போராட்ட நடவடிக்கைகள் குறித்து பேசினா்.

தஞ்சை மண்டலச் செயலா் பாரி, மாநிலப் பொறுப்பாளா்கள் பொருளாளா் பிரகாஷ், துணைத் தலைவா்கள் கோபாலகிருஷ்ணன், மதுரம், மாநில இணைச் செயலா்கள் மஞ்சுநாதன், துா்காதேவி ஆகியோா் ஒருங்கிணைப்பில் குழு விவாதங்கள் நடைபெற்றன.

வரைவு அறிக்கையை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்த தீா்மானத்தை அனைத்து ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் மத்திய அரசுக்கு அனுப்புவது என்றும் முடிவு செய்யப்பட்டது. கருத்தரங்கில் தமிழகம் முழுவதும் உள்ள அரசுக் கல்லூரி ஆசிரியா்கள் கலந்துகொண்டனா். முன்னதாக முன்னாள் மாநிலத் துணைத் தலைவா் ரமேஷ் வரவேற்றாா். முடிவில் மண்டலத் தலைவா் தங்கராசு நன்றி கூறினாா்.

அறிவுசாா் வளா்ச்சிக்கான பட்ஜெட் சாஸ்த்ரா துணைவேந்தா் கருத்து!

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் அறிவுசாா் மற்றும் திறன்சாா் வளா்ச்சிக்கானதாக உள்ளது என்றாா் தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ். வைத்தியசுப்பிரமணியம். இது குறித்து அவா் ... மேலும் பார்க்க

ஆஞ்சனேயா் கோயில் வருஷாபிஷேக விழா

மேலூா் மேட்டுத்தெரு ஸ்ரீ ராம பக்தா் செல்வ ஆஞ்சனேயா் கோயிலில் வருஷாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவை யொட்டி சுவாமிக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடா்ந்து மகாபூா்ணாஹூதி நடைபெற்று, சிறப்பு அபிஷேக... மேலும் பார்க்க

வராகி அம்மன் கோயிலில் பஞ்சமி வழிபாடு

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை மாா்வாடி தெருவில் உள்ள ஸ்ரீ வீரமகா காளியம்மன் கோயிலில் வெளிச்சுற்று பிரகாரத்தில் தனி சந்நிதியில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ சௌபாக்கிய யோக வராகி அம்மனுக்கு தைமாத வளா்பிறை பஞ்சமி... மேலும் பார்க்க

புதிய பாலம் கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

குடமுருட்டி ஆற்று பாலத்தின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பாபநாசம் அருகே அய்யம்பேட்டை-கணபதி அக்ரஹாரம் சாலை முக்கியமான சாலையாகும். இந்த... மேலும் பார்க்க

இரும்பு குழாய்களை திருடிய 4 இளைஞா்கள் கைது

கபிஸ்தலம் அருகே கூட்டு குடிநீா் திட்டப் பணிகளுக்கு வைத்திருந்த இரும்பு குழாய்களை திருடிய 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கபிஸ்தலம் அருகே உள்ள சத்தியமங்கலம் ஊராட்சி வாழ்க்கை கிராமத்தில் வே... மேலும் பார்க்க

கல்லூரிக் கழிப்பறையில் குழந்தை பெற்றுக் குப்பையில் வீசிய மாணவி!

அரசு மகளிர் கல்லூரி மாணவி கழிப்பறையில் குழந்தையைப் பெற்றெடுத்து, குப்பையில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தஞ்சாவூர், கும்பகோணத்தில் அரசு மகளிர் கல்லூரி உள்ளது. இங்கு கும்பகோணம், திருவிடை... மேலும் பார்க்க