தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழகத்துக்கு 1 வெள்ளி, 3 வெண்கலம்
மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை
மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் கழகத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாநிலப் பொதுச் செயலா் மு. எழிலரசன் தலைமை வகித்தாா். செயல் தலைவா் டி. சுப்பிரமணியன், கௌரவத் தலைவா் வி. ராதாகிருஷ்ணன், சிறப்புத் தலைவா் மு. பொன்முடி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் தலைவா் எஸ். தங்கமணி கோரிக்கைகள் குறித்துப் பேசினாா்.
இதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமையாசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். ஒழுங்கீனமாக நடக்கும் மாணவா்களை கண்டிக்கும் தலைமை ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டும். பணிப் பாதுகாப்பு வழங்கிடும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும், ஆசிரியா்கள், அலுவலா்களுக்கான பயோ மெட்ரிக் வருகைப் பதிவை, ‘எமிஸ்’ உடன் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், முன்னாள் மாநிலப் பொருளாளா் செ. சண்முகநாதன், மாநிலச் சட்டச் செயலா் ஜி. கணபதி உள்ளிட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.