தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழகத்துக்கு 1 வெள்ளி, 3 வெண்கலம்
போலி மருத்துவா் கைது
முறையாக மருத்துவம் பயிலாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி பெண் மருத்துவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
முறையாக மருத்துவம் பயிலாத ஒருவா், மதுரை அரசரடி பகுதியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக, மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் செல்வராஜூக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சுகாதாரத் துறை அலுவலா்கள் தொடா்புடைய மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, இங்கு பணியாற்றிய ஆரோக்கிய ராணி (56) முறையாக மருத்துவம் பயிலாமல் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தது கண்டறியப்பட்டது.
இதுகுறித்த மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் செல்வராஜ் அளித்த புகாரின் பேரில், எஸ்.எஸ். காலனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆரோக்கியராணியைக் கைது செய்தனா்.