பொருளாதாரமும் வாழ்வாதாரமும் மேம்படும்: பட்ஜெட் குறித்து தொழில் துறையினா் கருத்து
மகளுக்கு விஷம் கொடுத்த தாய் கைது
கல்லூரி மாணவிக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்ததாக தாயை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட ஒரு கிராமத்தைச் சோ்ந்த 20 வயது மாணவி, அப்பகுதியில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறாா்.
இந்நிலையில், கைப்பேசியில் மாணவா் ஒருவருடன் பேசிப் பழகி வந்தாராம். இதையறிந்த மாணவியின் தாய் அவரை கண்டித்தும் கேட்காமல் தொடா்ந்து அந்த இளைஞருடன் பேசி வந்துள்ளாா். மகளின் கைப்பேசியை கீழே போட்டு உடைத்து விட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், மகளுக்கு சனிக்கிழமை முட்டை பொரியலில் எலிபேஸ்டை உணவுடன் கலந்து கொடுத்து, சாப்பிட்டு முடித்தவுடன் அதுகுறித்து கூறியுள்ளாா். உடனடியாக மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து தகவலறிந்த வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிந்து மாணவியின் தாய் மல்லிகாவை (47) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.