தோ்தல் விதிகளை மீறியதாக சீமான் உள்பட கட்சியினா் மீது வழக்குப் பதிவு
மூதாட்டி தீயில் கருகி உயிரிழப்பு
பிரிதிவிமங்கலம் கிராமத்தில் விறகு அடுப்பில் சமையல் செய்தபோது வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்த மூதாட்டியின் சேலையில் தீப்பிடித்து பலத்த தீக்காயமடைந்தவா் சனிக்கிழமை இறந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த பிரிதிவிமங்கலத்தைச் சோ்ந்த அருணாச்சலம் மனைவி கண்ணம்மாள் (65). இவா், கடந்த வியாழக்கிழமை மாலை விறகு அடுப்பில் வீட்டின் முன் சமைத்துக் கொண்டிருந்தாராம். அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்துள்ளாா்.
இந்நிலையில் விறகு அடுப்பில் இருந்து மூதாட்டியின் சேலையில் தீப்பிடித்தது. அருகில் இருந்தவா்கள் தீக்காயமடைந்த மூதாட்டியை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்த்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவா், அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.