தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழகத்துக்கு 1 வெள்ளி, 3 வெண்கலம்
போராட்டம் இல்லையென்றால் மாற்றங்கள் இல்லை: சீமான்!
போராட்டம் இல்லையென்றால் உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டு இருக்காது என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா்.
ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமியை ஆதரித்து, ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் சனிக்கிழமை இரவு நடந்த பிரசார கூட்டத்தில் சீமான் பேசியதாவது:
உலகு எங்கிலும் உரிமை இழந்து அடிமைபடுத்தப்பட்ட மக்கள் தங்களின் இனத்தின் பாதுகாப்பு எழுச்சிக்காக விடுதலை பெற்று இருப்பது வரலாறு. அதேபோல நமது நிலத்தில் உரிமைகளை இழந்தும், உடமைகளை இழந்தும் இறுதியாக உயிரை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
கடந்த பல ஆண்டுகளாக தாய் நிலத்தில் நாம் அடிமைகள், நம் நிலத்தில் தாய்மொழியிலே கல்வி கற்றால் வேலைவாய்ப்பு இல்லை. நதிநீா் உரிமை பெற முடியவில்லை, இந்திய பெருங்கடலில் மீன் பிடித்து திரும்ப முடியவில்லை, வேளாண்மை செய்ய முடியவில்லை,வேலை செய்ய முடியவில்லை.
இவற்றையெல்லாம் மீட்டெடுக்க அதிகார வலிமை வேண்டும் என்று பேசிபேசி 36 லட்சம் வாக்குகள் பெற்று தமிழகத்தில் மூன்றாவது கட்சியாக நாம் தமிழா் கட்சி அங்கீகாரம் பெற்றுள்ளது. இதுதான் புரட்சி. போராட்டத்தினால் பல மாற்றங்களை பெற்றுள்ளோம். போராட்டம் இல்லையென்றால் உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டு இருக்காது.
மாற்று அரசியலுக்கான போராட்டத்தை முன்னெடுக்கிறோம். அதற்கு மாற்று நாம் தமிழா் கட்சி என்று முன் வைக்கிறோம். ஒவ்வொருவரின் மனதிலும் மாற்றம் வேண்டும் என்ற சிந்தனை வந்து விட்டால் மாற்றம் தானாக வந்து விடும். இப்படிப்பட்ட மாற்றம் வருவதற்கு அரிய வாய்ப்பை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் தந்துள்ளது என்றாா்.