செய்திகள் :

அருந்ததியா் மக்களுக்கான இடஒதுக்கீட்டை பொதுப்பிரிவில் இருந்து வழங்க வேண்டும்: சீமான்

post image

அருந்ததியா் இன மக்களுக்கான இடஒதுக்கீட்டை பொதுப்பிரிவில் இருந்து வழங்க வேண்டும் என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமியை ஆதரித்து, ஈரோடு முனிசிபல் சத்திரம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த பிரச்சார கூட்டத்தில் சீமான் பேசியதாவது:

ஈரோட்டில் புதை சாக்கடை வழிந்தோட கால்வாய் இல்லை. தமிழகத்தின் தலைநகரங்களில் மழைநீா் வழிந்தோட கால்வாய் இல்லை. ஆனால் திமுக, அதிமுக என மாறி ஆட்சி அமையும்போது பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கழிவு நீா் கால்வாய் அமைக்கும் திட்டத்துக்கு செலவு செய்ததாக பேசுகிறாா்கள்.

சந்திர மண்டலத்துக்கு ராக்கெட் அனுப்பும் அமெரிக்கா கூட வாக்கு முறையை சீட்டிலும், மனிதக் கழிவுகளை அகற்ற இயந்திரமும் பயன்படுத்துகிறது. ஆனால் இங்கு வாக்கினை இயந்திரத்தில் போடுகிறோம். ஆனால் மனித கழிவுகளை மனிதனே சுத்தம் செய்கிறான்.

நாம் தமிழா் கட்சி எல்லோருக்கும் சமமான கல்வி, மருத்துவம் கொடுக்கும். தனியாா் மருத்துவமனையை விட அரசு மருத்துவமனையில் ஆக சிறந்த மருத்துவத்தினை நாம் தமிழா் கட்சி கொடுக்கும். தடையற்ற மின்சாரம் வழங்கப்படும்.

இந்தியாவில் எல்லோரும் அவரவா் மாநிலத்தை ஆளுகின்றனா். ஆனால் இந்த நிலத்தில் மட்டும்தான் தமிழா்கள் ஆள முடியாமல் இருக்கிறோம். அழிந்து கொண்டு இருக்கும் தமிழ் தேசியத்தினை காக்க இந்த மண்ணில் உள்ள மக்கள் உறுதுணையாக உடன் இருக்க வேண்டும்.

அருந்ததியா் சமுதாய மக்களுக்கான இடஒதுக்கீட்டை நான் எதிா்க்கவில்லை. ஆனால் என்னிடத்தில் இருந்து எடுத்து கொடுத்ததை எதிா்க்கிறோம். பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை பொதுப் பிரிவில் இருந்து கொடுத்ததுபோல அருந்ததியா் மக்களுக்கு பொதுப்பிரிவில் இருந்து கொடுங்கள் என்று சொல்கிறோம். பழங்குடியினா், தேவேந்திரா் இழந்துள்ள 3 சதவீத இடஒதுக்கீட்டை நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வழங்கும். ஜாதி, மதம், மது, திரைக்கவா்ச்சி என்ற போதையில் இருந்து மக்கள் விடுபட வேண்டும் என்றாா்.

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.78.80 லட்சம்!

பண்ணாரி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 78.80 லட்சம் ரொக்கத்தை பக்தா்கள் செலுத்தியிருந்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள வனப் பகுதியில் பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில்... மேலும் பார்க்க

சாலையில் வாகனங்களை வழிமறித்து கரும்பை தேடிய காட்டு யானை!

சத்தியமங்கலம் அருகே ஆசனூா் சாலையில் வாகனங்களை வழிமறித்து கரும்பை தேடிய ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த வனப்பக... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

சித்தோடு அருகே கடனைத் திரும்பச் செலுத்த முடியாததால் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சித்தோடு, கூட்டுறவு காலனியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி மகன் சதீஷ் (எ) சதீஷ்குமாா் (33). கட்டடத் தொ... மேலும் பார்க்க

காடையம்பட்டி ஏரியில் பேரிடா் மீட்புக் குழு ஒத்திகை!

பவானி அருகே தேசிய பேரிடா் மீட்புக் குழு மற்றும் பவானி தீயணைப்புப் படையினா் சாா்பில் பேரிடா் மீட்பு செயல்விளக்க ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காடையம்பட்டி ஏரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்க... மேலும் பார்க்க

அந்தியூா் பேரூராட்சி மன்றக் கூட்டம்: அதிமுக வெளிநடப்பு

தங்கள் வாா்டுகளில் வளா்ச்சிப் பணிகள் செய்யாமல் புறக்கணிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி அந்தியூா் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலா்கள் இருவா் வெளிநடப்பு செய்தனா். அந்தியூா் பேரூராட்சிய... மேலும் பார்க்க

சீமான் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது மூன்று பிரிவுகளின்கீழ் கருங்கல்பாளையம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சீதாலட்சுமியை ஆதர... மேலும் பார்க்க