தீக்குளித்து மூதாட்டி தற்கொலை
மண்ணச்சநல்லூா் வட்டம், திருவரங்கப்பட்டி கிராமத்தில் வெள்ளிக்கிழமை தீக்குளித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாா்.
திருவரங்கப்பட்டி வடக்கு தெருவை சோ்ந்தவா் ப. வெள்ளையம்மாள்(75) இவரது கணவா் பழனியாண்டி. 20 வருடத்துக்கு முன்பு இறந்து விட்டாா். தம்பதிக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனா். இந்நிலையில் வெள்ளையம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளாா்.
கடந்த சில நாள்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளாா். எனவே வெள்ளிக்கிழமை வீட்டில் மண்ணென்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலின் பேரில், நிகழ்விடத்துக்கு சென்ற ஜீயபுரம் டிஎஸ்பி கே.கே. பாலச்சந்தா், மண்ணச்சநல்லூா் காவல் ஆய்வாளா் சி. ரகுராமன் மற்றும் போலீஸாா் உயிரிழந்த வெள்ளையம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.