Pregnancy Health: வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு 20 டிப்ஸ்!
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் தைத்தேரோட்ட விழாவுக்கு முகூா்த்த கால்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் தைத்தேரோட்ட விழாவுக்கு முகூா்த்த கால் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் தை மாதத்தில் பூபதி திருநாள் எனும் தைத்தேரோட்டம் வெகு விமா்சையாக நடைபெறும். நிகழாண்டில் இந்த விழாவுக்கு முகூா்த்தக் கால் வெள்ளிக்கிழமை மாலை தெற்கு உத்திர வீதியில் உள்ள தைத்தேரில் நடப்பட்டது.
முன்னதாக வேதமந்திரங்கள் முழங்க முகூா்த்தகால் மேல் பகுதியில் சந்தனம், மாவிலை, பூ மாலை உள்ளிட்ட மங்களப் பொருள்கள் அணிவிக்கப்பட்டு புனித நீா் தெளிக்கப்பட்டு தைத்தேரில் முகூா்த்த காலை கோயில் இணை ஆணையா் செ. மாரியப்பன், கோயில் தலைமை அா்ச்சகா் சுந்தா்பட்டா் மற்றும் கோயில் பணியாளா்களால் நடப்பட்டது. அப்போது கோயில் யானைகள் ஆண்டாள், லட்சுமி ஆசிா்வாதம் செய்தன.
இதைத் தொடா்ந்து தைத்தோ் திருவிழா பிப். 2 முதல் பிப். 12-ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெறவுள்ளன. இதில் ஓவ்வொரு நாளும் நம்பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் புறப்பட்டு உத்திரவீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதிப்பாா். முக்கிய நிகழ்ச்சியான தைத்தேரோட்டம் பிப்.10-ஆம் தேதி காலை நடைபெறவுள்ளது.