தை மூன்றாம் வெள்ளி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் அம்பாளுக்கு வெள்ளி கேடயத்தில் புறப்பாடு நடைபெற்றது.
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் தை மூன்றாம் வெள்ளியை யொட்டி உற்சவ அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மலா் அலங்காரத்தோடு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு வெள்ளி கேடயத்தில் உள் பிரகாரம் புறப்பாடு நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.