அவசரகாலத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள்! 2025 பற்றி பாபா வங்காவின் கணிப்பு
பாபா வங்கா கணித்திருப்பதாக அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகும். அந்த வகையில், 2025ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் இயற்கைப் பேரழிவுகள் நேரிடு, அவசரகாலத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள் என்று குறிப்பிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாம் கடந்துகொண்டிருக்கும் 2025ஆம் ஆண்டில், உலகில் மிக முக்கியமான மாற்று எரிபொருள் கண்டுபிடிக்கப்படும். இது வருங்காலத்துக்கு ஏற்ற சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதுவரை நிகழ்ந்ததைவிட உலகம் முழுவதும் பரவலாக நிலநடுக்கங்கள் நேரிடும் என்றும், அது மட்டுமல்லாமல், சூறாவளி, சுனாமி போன்றவை நேரிடும், மக்கள் இயற்கையை பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணரும் நேரம் வந்துவிட்டதாகவும், அவசரகாலங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கேலிய பண்டேவா குஷ்டெரோவா என்ற 81 வயதான கியூபா நாட்டைச் சேர்ந்த இவரை பாபா வங்கா என்றே இவரைத் பின்தொடர்வோர் அன்போடு அழைக்கிறார்கள்.
உலகின் தீர்க்கதரிசி என்று அழைக்கப்படும் பாபா வங்கா, தனது 12 வயதில் பார்வையை இழந்தார். பார்வையை இழந்தது முதல் அவருக்கு எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை கணிக்கும் ஆற்றல் கிடைத்துள்ளது.
அவர் இந்த ஆண்டுக்கான கணிப்புகளை மட்டுமல்ல, 5079 ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு ஆறு கணிப்பு வீதம் ஒவ்வொரு ஆண்டுக்கும் தெள்ளத்தெளிவான கணிப்புகளை வெளியிட்டுள்ளாராம். அது என்ன 5079 ஆம் ஆண்டு வரை என்கிறீர்களா? அவரது கணிப்பின்படி, 5079ஆம் ஆண்டில், ஒட்டுமொத்த உலகமுமே அழிந்துவிடுமாம்.
அவர் எழுதிய பல கணிப்புகள், இரட்டைக் கோபுரங்கள் தாக்குதல், டயானா மரணம், ரஷ்யா - உக்ரைன் போர் என பலவும் சொன்னபடி நடந்ததால், அவரைப் பின்தொடர்வோர் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.