செய்திகள் :

வருண் சக்கரவர்த்தி தாக்கத்தை ஏற்படுத்த இதுவே சரியான தருணம்: ரவி சாஸ்திரி

post image

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் வருண் சக்கரவர்த்தி பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடைசி குரூப் ஸ்டேஜ் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேற்று விளையாடின. இந்தப் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இந்திய அணியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதி போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் மாற்றம்!

பிளேயிங் லெவனை மாற்ற வேண்டாம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை அரையிறுதிப் போட்டியில் விளையாடவுள்ள நிலையில், இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய அதே பிளேயிங் லெவனுடன் அரையிறுதிப் போட்டியில் களமிறங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

ரவி சாஸ்திரி

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வருண் சக்கரவர்த்தி மிகவும் அற்புதமாக பந்துவீசினார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வருண் சக்கரவர்த்தியை பிளேயிங் லெவனில் இடம்பெற வைக்க வேண்டும் என்ற சரியான முடிவை எடுத்த இந்திய அணி நிர்வாகத்துக்கு முழு மதிப்பெண்கள் கொடுக்கலாம். ஏனெனில், வருண் சக்கரவர்த்தி மிடில் ஓவர்களில் நன்றாக விக்கெட் எடுக்கக் கூடியவர்.

இதையும் படிக்க: இரண்டு அணிகளுக்கும் அழுத்தம் இருக்கும்; அரையிறுதி குறித்து ரோஹித் சர்மா பேச்சு!

வருண் சக்கரவர்த்தியின் அபார திறமையை இந்திய அணி பயன்படுத்திக்கொள்ள இதுவே சரியான தருணம். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அவரை பிளேயிங் லெவனில் கொண்டு வந்தனர். அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். வீரர் ஒருவரின் தற்போதைய ஃபார்மை நான் எப்போதும் நம்புவேன்.

வருண் சக்கரவர்த்தி சிறந்த ஃபார்மில் இருக்கிறார். அவரது உடல்மொழி மற்றும் தன்னம்பிக்கை அபாரமாக உள்ளது. அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் அவரது பந்துவீச்சுக்கு எதிராக அதிகம் விளையாடியது கிடையாது.

இதையும் படிக்க: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டனாக அஜிங்க்யா ரஹானே நியமனம்!

நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய அதே பிளேயிங் லெவனுடன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி களமிறங்க வேண்டும் என நினைக்கிறேன் என்றார்.

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது சவாலானது: ஸ்டீவ் ஸ்மித்

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது சவாலானது என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளத... மேலும் பார்க்க

ரோஹித் சர்மாவை உருவகேலி செய்து சமூக வலைதளப் பதிவு: பிசிசிஐ எதிர்வினை!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஷாமா முகமது சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டிருப்பதே இந்திய அளவில் இன்றைய முன்னணி தலைப்புச் செய்திகளில் ஒன்றாக வல... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு காரணம் என்ன? நியூசி. வேகப் பந்துவீச்சாளர் பதில்!

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் மாட் ஹென்றி பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடைசி குரூப் ஸ்டேஜ் போட்டியில் இந்தியா மற்று... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதி போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் மாற்றம்!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அரையிறுதிப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றுடன் குரூப் ஸ்டேஜ் போட்டிகள... மேலும் பார்க்க

இரண்டு அணிகளுக்கும் அழுத்தம் இருக்கும்; அரையிறுதி குறித்து ரோஹித் சர்மா பேச்சு!

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் இரண்டு அணிகளுக்கும் அழுத்தம் இருக்குமென இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியு... மேலும் பார்க்க

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டனாக அஜிங்க்யா ரஹானே நியமனம்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்க்யா ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்த... மேலும் பார்க்க