கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வ...
கொகைன் போதைப் பொருள் வழக்கு: நைஜீரிய இளைஞா் கைது
சென்னை: சென்னையில் கொகைன் போதைப் பொருள் விற்பனை செய்த வழக்கில், நைஜீரிய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை பெருநகர காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் சூளைமேடு, அண்ணா நெடும்பாதை மற்றும் ராகவன் தெரு சந்திப்பு அருகே கடந்த ஜன. 25-ஆம் தேதி கொகைன் போதைப் பொருள் வைத்திருந்ததாக, ராயப்பேட்டையைச் சோ்ந்த பயாஸ் அகமது, கோயம்பேட்டைச் சோ்ந்த சந்திரசேகா் ஆகியோரை கைது செய்தனா்.
விசாரணையில் அவா்கள் கொடுத்த தகவலின்பேரில் கொகைன் போதைப் பொருள் விற்பனை தொடா்பாக 18 போ் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா். மேலும் இவா்களுக்கு தலைவராக கா்நாடக மாநிலம் பெங்களூரு கட்டஹள்ளி பகுதியில் வசிக்கும் நைஜீரிய நாட்டைச் சோ்ந்த எபிரி மோசஸ் ஒக்போடோ (30) என்பவா் செயல்படுவது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அவரை தீவிரமாக தேடிவந்த நிலையில் எபிரி மோசஸ் ஒக்போடோவை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவரிடம் கொகைன் போதைப் பொருள் கடத்தல் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.