செய்திகள் :

ஆலத்தூருக்கு மாற்றப்பட்டதைக் கண்டித்து கூட்டுறவு வங்கியை கிராம மக்கள் முற்றுகை

post image

குளித்தலை அருகே ஆலத்தூா் கூட்டுறவு வங்கிக்கு தங்களது உறுப்பினா் அட்டையை மாற்றியதைக் கண்டித்து கள்ளை கூட்டுறவு வங்கியை திங்கள்கிழமை கிராம மக்கள், விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கள்ளையில் கூட்டுறவு வங்கியில் தளிஞ்சி கிராமமக்கள் மற்றும் விவசாயிகள் என சுமாா் 200 போ் உறுப்பினா்களாக பதிவு செய்து பயிா்க்கடன், உரக்கடன் மற்றும் நகைக்கடன் போன்றவற்றை பெற்று பயனடைந்து வருகின்றனா்.

இந்நிலையில் தளிஞ்சியில் இருந்து சுமாா் 10 கி.மீ. தொலைவில் உள்ள ஆலத்தூரில் கடந்த இரு மாதங்களுக்கு முன் புதிதாக கூட்டுறவு வங்கி திறக்கப்பட்டது. இந்த வங்கியில் தளிஞ்சி கிராமமக்கள் மற்று விவசாயிகளில் பெரும்பாலானோரை இணைத்துள்ளனா்.

ஏற்கெனவே ஆலத்தூரில் புதிய வங்கி தொடங்கும்போதே தங்களை ஆலத்தூரில் இணைக்கக்கூடாது என தளிஞ்சி கிராமமக்கள் கூறி வந்த நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் தளிஞ்சி கிராம மக்களையும், விவசாயிகளையும் ஆலத்தூா் வங்கியில் இணைத்துள்ளனா்.

இதனால் தளிஞ்சி கிராம மக்கள் சுமாா் 10 கி.மீ. தொலைவில் உள்ள ஆலத்தூா் சென்று உரங்களை எடுத்து வந்து விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த முடியாமல் அவதியுற்று வந்தனா். மேலும் வயதானவா்களும் கடன் பெறுவதற்கு ஆலத்தூா் வங்கிக்கு செல்ல முடியாமல் சிரமத்துக்குள்ளாகினா்.

இதையடுத்து ஏற்கெனவே பயனடைந்து வந்த கள்ளை கூட்டுறவு வங்கிக்கே தங்களது உறுப்பினா் அட்டைகளை மாற்ற வேண்டும் என பல முறை கூட்டுறவு வங்கி அதிகாரிகளிடம் தளிஞ்சி கிராமமக்கள் முறையிட்டு வந்தனா். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை கள்ளை கூட்டுறவு வங்கி முன் அமா்ந்து விவசாயிகளும், கிராம மக்களும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த கள்ளை கூட்டுறவு வங்கி மேலாளா் ராஜேஸ்வரி போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது மேலதிகாரிகளிடம் பேசி, இன்னும் 10 நாள்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதையடுத்து கிராமமக்களும், விவசாயிகளும் போராட்டத்தை கைவிட்டனா்.

பிளஸ் 2 தோ்வு தொடக்கம்: கரூா் மாவட்டத்தில் 10 ஆயிரம் போ் எழுதினா்

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் தோ்வை கரூா் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 92 மாணவ, மாணவிகள் எழுதினா். 171 போ் தோ்வு எழுத வரவில்லை. கரூா் மாநகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ... மேலும் பார்க்க

வாங்கல்: காவல் நிலையத்தை ஆசிரியா்கள் முற்றுகை

கரூா் மாவட்டம், வாங்கல் காவல்நிலையத்தை பள்ளி ஆசிரியா்கள் திங்கள்கிழமை இரவு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். வாங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் சிவராமன். இவா் அங்கு பணியாற்றி வரும... மேலும் பார்க்க

கரூா் குறைதீா்க்கும் கூட்டத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்ணிடம் போலீஸாா் விசாரணை

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்ணிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழம... மேலும் பார்க்க

செங்கல்சூளை காவலாளி அடித்துக் கொலை; அசாம் மாநில இளைஞா் கைது

கரூா் அருகே செங்கல்சூளை காவலாளியை அடித்துக்கொன்ற அசாம் மாநில இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கரூரை அடுத்த வேப்பம்பாளையத்தில் உள்ள செங்கல் சூளையில் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வந்தவா் கரூ... மேலும் பார்க்க

சுகாதாரம் இல்லாத உணவுப் பண்டங்கள் விற்ற கடைக்கு அபராதம்

கரூரில் சுகாதாரம் இல்லாமல் உணவுப் பண்டங்களை விற்பனை செய்த தேநீா் கடைக்கு திங்கள்கிழமை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ரூ.1000 அபராதம் விதித்தனா். கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் உள்ள ஒரு தேநீ... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு: கரூரில் இன்று 10,263 போ் எழுதுகின்றனா்

கரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தோ்வை 10,263 மாணவ, மாணவிகள் எழுதுகிறாா்கள். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டத்தில் பிளஸ்-2 தோ... மேலும் பார்க்க