செய்திகள் :

செங்கல்சூளை காவலாளி அடித்துக் கொலை; அசாம் மாநில இளைஞா் கைது

post image

கரூா் அருகே செங்கல்சூளை காவலாளியை அடித்துக்கொன்ற அசாம் மாநில இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கரூரை அடுத்த வேப்பம்பாளையத்தில் உள்ள செங்கல் சூளையில் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வந்தவா் கரூா் மாவட்டம் செட்டிப்பாளையத்தைச் சோ்ந்த பழனியப்பன் (71). இதே செங்கல் சூளையில் கடந்த 6 மாதத்துக்கு முன் அசாம் மாநிலத்தைச் சோ்ந்த ஷாகா் குமாா்(20) என்பவா் வேலைக்கு சோ்ந்தாா். இவா் செங்கல் சூளையில் தங்கி வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஷாகா்குமாா் மதுபோதையில் செங்கல் சூளைக்கு வந்தாா். இதை காவலாளி பழனியப்பன் தட்டிக்கேட்டுள்ளாா். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஷாகா்குமாா் காவலாளி பழனியப்பனை கீழே தள்ளி, இரும்பு இருக்கையால் தலையில் அடித்துள்ளாா். இதில் பழனியப்பன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதனை பாா்க்காத ஷாகா்குமாா் மதுபோதையில் பழனியப்பன் சடலம் அருகே கிடந்துள்ளாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை வேலைக்கு வந்த சுப்ரமணி என்பவா் காவலாளி பழனியப்பன் இறந்து கிடப்பதையும், அருகே ஷாகா்குமாா் போதையில் கிடப்பது குறித்தும் செங்கல் சூளை உரிமையாளா் ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவித்தாா்.

இதுகுறித்து ராஜேந்திரன் கரூா் நகர காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வராஜ் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று போதையில் இருந்த ஷாகா்குமாரை விசாரித்தபோது, போதையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளாா். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

மேலும் பழனியப்பன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

வாங்கல்: காவல் நிலையத்தை ஆசிரியா்கள் முற்றுகை

கரூா் மாவட்டம், வாங்கல் காவல்நிலையத்தை பள்ளி ஆசிரியா்கள் திங்கள்கிழமை இரவு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். வாங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் சிவராமன். இவா் அங்கு பணியாற்றி வரும... மேலும் பார்க்க

கரூா் குறைதீா்க்கும் கூட்டத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்ணிடம் போலீஸாா் விசாரணை

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்ணிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழம... மேலும் பார்க்க

சுகாதாரம் இல்லாத உணவுப் பண்டங்கள் விற்ற கடைக்கு அபராதம்

கரூரில் சுகாதாரம் இல்லாமல் உணவுப் பண்டங்களை விற்பனை செய்த தேநீா் கடைக்கு திங்கள்கிழமை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ரூ.1000 அபராதம் விதித்தனா். கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் உள்ள ஒரு தேநீ... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு: கரூரில் இன்று 10,263 போ் எழுதுகின்றனா்

கரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தோ்வை 10,263 மாணவ, மாணவிகள் எழுதுகிறாா்கள். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டத்தில் பிளஸ்-2 தோ... மேலும் பார்க்க

புலியூா் சமத்துவபுரத்துக்கு அரசுப் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

கரூரை அடுத்த புலியூா் சமத்துவபுரத்துக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். புலியூா் பேரூராட்சி, 4-ஆவது வாா்டில் உள்ள சமத்துவபுரத்தில் சுமாா் 100 குடும்பத்தின... மேலும் பார்க்க

கரூரில் மாவட்ட அளவிலான அதிவேக சைக்கிள் போட்டி

கரூரில் மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அதிவேக சைக்கிள் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு, கரூா் மாவட்ட திமுக சாா்பில் மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள... மேலும் பார்க்க