செய்திகள் :

வெப்ப வாத பாதிப்புகளை தடுப்பது எப்படி?

post image

சென்னை: தமிழகத்தில் அடுத்த நான்கு நாள்களுக்கு வெப்ப நிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், திடீரென உடலில் ஏற்படும் வெப்ப வாத பாதிப்புகளைத் தவிா்ப்பதற்கான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் வெளியிட்ட அறிவிப்பு:

அதிகரிக்கும் வெப்பநிலையால் ஏற்படும் விளைவுகளைத் தடுக்க பொது மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். அந்த வகையில், உடலில் நீா்ச்சத்தை தக்க வைத்துக் கொள்வது முக்கியம். அதற்கு அதிக அளவு நீா் அருந்த வேண்டும். உப்பு-சா்க்கரை கரைசல், எலுமிச்சை சாறு, மோா், இளநீா் உள்ளிட்ட பானங்களையும் அருந்தலாம்.

இறுக்கமான ஆடைகளை அணியாமல் பருத்தி ஆடைகளை தளா்வாக அணியலாம். வெப்பத்திலிருந்து தற்காத்துக்கொள்ள குடை, தொப்பி, கையுறை உள்ளிட்ட பொருள்களை பயன்படுத்த வேண்டும். காலணி அணிந்தே வெளியே செல்ல வேண்டும்.

வசிப்பிடங்களில் காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்வது முக்கியம். முதியவா்கள், இணைநோயாளிகள், குழந்தைகள், கா்ப்பிணிகள், நேரடி வெயிலில் பணியாற்றுவோா், குளிா் பிரதேசங்களிலிருந்து இங்கு வந்தவா்கள் முன்னெச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம்.

அவா்கள் உடலின் வெப்பநிலை அதிகமாகாத வகையில் தற்காத்துக் கொள்ள வேண்டும். பொதுவாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளபோது வெளியே செல்வதைத் தவிா்க்கலாம். அத்தகைய நேரங்களில் தீவிரமாக பணியாற்றக் கூடாது. மது, புகை, தேநீா் போன்ற பானங்கள் அருந்துவதைத் தவிா்க்க வேண்டும். பழைய உணவுகள், அதிக புரதம் உள்ள உணவுகளை உட்கொள்ளக் கூடாது. நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு அருகே செல்ல குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது. அதிலிருந்து வெளியேறும் அதீத வெப்பம் உடல் நலத்தை பாதிக்கக்கூடும்.

தலைவலி, மயக்கம், தலை சுற்றல் ஏற்பட்டால் மருத்துவ உதவியை உடனடியாக நாட வேண்டும். தேவைப்பட்டால் அவசரகால ‘108’ சேவையை அழைக்கலாம் என்று அந்த வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கம்!

சென்னை : தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் வரை இயக்கப்படும் என்கிற நடைமுறை இன்றிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. மேலும் பார்க்க

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்

நாகப்பட்டினம்: "கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை இலங்கை அனுமதிக்கும் வகையில், புதியதொரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு திங்கள்கிழமை தொடங்கியது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், முதல் நாள் நடைபெற்ற மொழிப்பாடத் தேர்வை 11,430 பேர் எழுதவில்லை.தமி... மேலும் பார்க்க

மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மாணவா்களுக்கு அவசரகால சிகிச்சை பயிற்சி திட்டம் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் முதுநிலை மற்றும் உயா் சிறப்பு மருத்துவ மாணவா்களுக்கு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட சீரான அவசர கால சிகிச்சை பயிற்சிகளை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு உலகை தமிழ் மொழி மிரட்டுகிறது: முன்னாள் துணைவேந்தா் ம.இராசேந்திரன்

சென்னை: இன்றைய செயற்கை நுண்ணறிவு உலகத்தை தமிழ் மொழி மிரட்டத் தொடங்கியிருக்கிறது என தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் ம.இராசேந்திரன் கூறினாா். சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்புக்கு விகிதாசார அடிப்படை முற்றிலும் பொருத்தமற்றது: திமுக எம்.பி.க்கள்

சென்னை: தொகுதி மறுசீரமைப்புக்கு விகிதாசார அடிப்படை எனும் நடைமுறை முற்றிலும் பொருத்தமற்றது என திமுக எம்.பி.க்கள் கருத்து தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, சிலா் எக்ஸ் தளத்தில் காணொலிகளை வெளியிட்டுள்ளனா். ... மேலும் பார்க்க