செய்திகள் :

லஞ்சம் பெறுவதாக ரகசிய தகவல்; நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் கட்டு கட்டாக சிக்கிய கணக்கில் வராத பணம்!

post image

ராமநாதபுரத்தில் நெடுஞ்சாலை துறை வளாகத்தில், நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாடு உட்கோட்ட அலுவலகம் உள்ளது. இங்கு ஒப்பந்தகாரர்களிடம் இருந்து லஞ்சமாக பணம் பெறுவதாக ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

நெடுஞ்சாலத்துறை தரக்கட்டுப்பாடு அலுவலகம்

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று மாலை ராமநாதபுரம் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக சிக்கின. அதில் ரூ. 5லட்சத்து 60 ஆயிரம் இருந்துள்ளது.

லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை

அவற்றை கைபற்றிய லஞ்ச ஒழிப்பு போலீஸார், இந்த பணம் குறித்து உதவி கோட்ட பொறியாளரான மதுரையைச் சேர்ந்த ரெங்கபாண்டியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த பணம் கணக்கில் வராதது என தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், உதவி கோட்ட பொறியாளர் மற்றும் ஊழியர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

SEBI: மீண்டும் சிக்கலில் Ex செபி தலைவர் மாதபி பூரி புச்; `5 பேர் மீது FIR பதிவு' - நீதிமன்றம் அதிரடி

அதானி குழும பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாக அமெரிக்காவின் ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கை வெளியிட்டது. இதில் அப்போதைய செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரிபுச்-க்கும் தொடர்பு இருக்கிறது என அந்த அறிக்கையில் க... மேலும் பார்க்க

Bank GM `ரூ.122 கோடி' வங்கியில் திருடிய பணத்தை என்ன செய்தார்..? சிக்கிய முக்கிய புள்ளிகள்..!

மும்பையை தலைமையிடமாக கொண்டு மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் செயல்பட்டு வந்த நியூ இந்தியா கோஆப்ரேடிவ் வங்கியில் ரூ.122 கோடி கையாடல் செய்யப்பட்டு இருப்பதை ரிசர்வ் வங்கி கடந்த மாதம் கண்டுபிடித்தது. இதை... மேலும் பார்க்க

Online Scams: கும்பமேளாவையும் விட்டுவைக்காத ஆன்லைன் மோசடி... விடுதி, விமான டிக்கெட் பெயரில் பணமோசடி

உத்தரப்பிரதேசத்தில் நடந்து வரும் கும்பமேளாவில் புனித நீராடவேண்டும் என்பது பலரின் விருப்பமாக இருக்கும். இதற்காக எத்தனையோ சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட போதிலும் அனைத்து ரயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.... மேலும் பார்க்க

Investment: 1993-ல் ரூ.10,000-க்கு செய்த முதலீடு; இப்போது லட்சங்களில் மதிப்பு! -எப்படித் தெரியுமா?

1993-ம் ஆண்டு ரூ.1,000-க்கு வாங்கிய மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகள் இப்போது எத்தனை லட்சங்களாக உயர்ந்திருக்கும் என்று சும்மா கணக்குப்போட்டு பாருங்களேன்.சென்னையை சேர்ந்தவர் ரவிக்குமார். 1993-ம் ஆண்டு உறவ... மேலும் பார்க்க

Asset Allocation: செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா.. முதலீட்டு உத்திகளை அறிய திருப்பூர் வாங்க..!

செல்வம் சேர்க்க அதனை பிரித்து முதலீடு செய்ய வேண்டும். அதனை அஸெட் அலோகேஷன் (Asset Allocation) என்பார்கள்.பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் (நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி ஃபண்டுகள்),... மேலும் பார்க்க