செய்திகள் :

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முறியடிப்பு!

post image

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முறியடிக்கப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக வியாழக்கிழமை இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 நகரங்களில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.

இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பல்வேறு ரேடாா்களையும், வான் பாதுகாப்பு அமைப்புகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு தகா்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானில் உள்ள லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், குவெட்டா உள்ளிட்டப் பகுதிகளில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் மே 8 ஆம் தேதி இரவு 11 மணியளவில், பெரிய ஊடுருவல் முயற்சியை முறியடித்ததாக எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

போர்ப் பதற்றத்துக்கு மத்தியில் பெரிய அளவிலான பயங்கரவாதிகளின் ஊடுருவல் முறியடிக்கப்பட்டிருப்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

ஏடிஎம்கள் மூடப்படுமா? போலி செய்தி குறித்து மத்திய அரசு எச்சரிக்கை

ஏடிஎம்கள் மூடப்படும், காஷ்மீர் விமானப் படைத் தளத்தில் தாக்குதல் நடைபெற்றது என பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருவதாக மக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.அதாவது, சமூக ஊடகங்களில், காஷ்மீர் விமா... மேலும் பார்க்க

ராணுவத் தளபதிக்கு கூடுதல் அதிகாரம் அளித்தது மத்திய அரசு!

இந்திய ராணுவத் தலைமை தளபதிக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.பிராந்தியங்களில் உள்ள படை வீரர்களை எல்லைப் பகுதிக்கு அழைத்துக் கொள்ள 3 ஆண்டுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

அடுத்து என்ன? பிரதமர் மோடியை சந்திக்கிறார் ராஜ்நாத் சிங்!

புது தில்லி : நாட்டின் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசவிருக்கிறார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.நே... மேலும் பார்க்க

தில்லியில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்கள், ஏவுகணைகளைப் பயன்படுத்திப் பல எல்லைப் பகுதிகளைக் குறிவைத்ததைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்ததால் தில்லியில் உள்ள முக்கிய இடங்களில் ... மேலும் பார்க்க

ஜம்மு, உதம்பூரில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு!

ஜம்மு, உதம்பூரில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.ஜம்மு - காஷ்மீர் உள்பட பல்வேறு மாநிலங்களின் எல்லையோர மாவட்டங்களில் உச்சகட்டப் போர்ச் சூழல் நிலவி வரும் நிலைய... மேலும் பார்க்க

கண்ணுக்கு கண் என்பது மொத்த உலகத்தையும் குருடாக்கும்: அம்பத்தி ராயுடு

இந்தியா, பாகிஸ்தான் போர் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு கூறியதை கவனம் ஈர்த்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதலையடுத்து இந்தியாவ... மேலும் பார்க்க