`நான் இருக்கும் இடத்தில் இடைவிடாத குண்டு சத்தம் கேட்கிறது' - ஜம்மு காஷ்மீர் முதல...
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!
சிஎஸ்ஐஆர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மத்திய தோல் (லெதர்) ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள புராஜெக்ட் அசோஸியேட் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்: 02/2025
பணி: Project Associate - II
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.20,000
தகுதி: பொறியியல் துறையில் கணினி, தகவல் தொழில்நுட்பம் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Project Associate - I
காலியிடங்கள்: 6
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: நெட், கேட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.31,000, தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.25,000 வழங்கப்படும்.
தகுதி: Computer Science, Data Science, Chemistry, Industrial Chemistry, Organic Chemistry, General Chemistry, Bio-informatics, Bio-technology பிரிவில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். Computer Science, Electronics and Communication, Information Technology, Artificial Intelligence, Bio-medical, Instrumentation Engineering போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம் -டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
பணி: Junior Research Fellow
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.31,000
தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் வேதியியல் துறையில் பட்டம் பெற்று நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://clri.org/careers forms.aspx இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து அதனுடன் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ், ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் இரண்டு சமீபத்திய வண்ண பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் எழுத்துத்தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
எழுத்துத் தேர்வு நடை பெறும் நாள்: 14.5.2025
தேர்வு நடைபெறும் இடம்: Triple Helix Auditorium, CLRI, Adyar, Chennai - 600 020, TamilNadu.