ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் வேலை
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Executive (Chemical)
காலியிடங்கள்: 41
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் Chemical Engineering, Chemical Technology போன்ற ஏதாவதொன்றில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம் -டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
வயது வரம்பு: 30.4.2025 தேதியின்படி 25-க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வருடங்கள் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,180. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு விண்ணப்பக் கட் டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.hindustanpetroleum.com.careers-current openings என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.5.2025