ஐஐஎம்-இல் ஆசிரியரல்லாத பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
மத்திய கல்வி அமைச்சத்தின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) புத்த கயாவில் காலியாக உள்ள ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Estate cum Project Officer (R/C)
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.78,800 - 2,09,200
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்து 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 55-க்குள் இருக்க வேண்டும்.
பணி: System Manager (R/C) - 1
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.67,700 - 2,08,700
தகுதி: பொறியியல் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் கணினி அறிவியல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது எம்சிஏ, எம்.எஸ்சி கணினி அறிவியல் முடித்து 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Office Assistant
காலியிடம் 1
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று 5 ஆண்டுப பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Nursing Staff(Female)
காலியிடம் 1
சம்பளம்: மாதம் ரூ. 25,500 - 81.100
தகுதி : Nursing பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Junior Horticulturist
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் Agriculture, Botany, Horticulture பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Legal Officer
காலியிடம் : 1
சம்பளம் : ரூ.50,000 - ரூ.60,000
தகுதி: சட்டப் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 65-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Management Trainee
காலியிடம் : 1
சம்பளம் : ரூ.20,000 -5.35,000
தகுதி: Management, Clerical, Counselling Psychology, Computer Science, IT SA வில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் குறைந்தது 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Library Trainee
காலியிடம் : 1
சம்பளம் : மாதம் ரூ.20,000 - 35,000
தகுதி: Library and Information Science பிரிவில் முதுகலை பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Accounts Trainee
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.20,000 -.35,000
தகுதி: வணிகவியல் பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலைப்பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Graudate Trainee
காலியிடம் : 1
சம்பளம்: மாதம் ரூ.15,000 - 20,000
தகுதி : ஏதாவது ஒருபாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிப்பதுடன் கணினியில் பணிபுரிவதில் நல்ல திறனும் 2 ஆண்டு பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்சி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு , திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://iimbg.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 7.5.2025
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.