கட்டுமானப் பணியின்போது கண்காணிப்பு கேமரா கட்டாயம்! சென்னை மாநகராட்சி
மே 6 வரை இஸ்ரேலுக்கான விமான சேவை நிறுத்தம்: ஏர் இந்தியா
இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, தில்லியிலிருந்து அங்குச் செல்லவிருந்த விமானத்தை அபுதாபிக்கு ஏர் இந்தியா நிறுவனம் திருப்பிவிட்டது.
இங்கிருந்து புறப்பட்ட பிறகு தாக்குதல் நடத்தப்பட்டதால், ஜோர்டான் வான்வெளிப்பரப்பில் விமானம் சென்றுக்கொண்டிருக்கும்போது அபுதாபிக்கு திருப்பிவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மே 6ஆம் தேதி வரை டெல் அவிவ் நகரத்துக்கு இயக்கப்படும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்வதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா மட்டுமின்றி ஜெர்மனியைச் சேர்ந்த லுஃப்தான்சா, அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ், சுவிட்சர்லாந்தின் சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர், மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றாக சைப்ரஸ் நாட்டுக்குச் சொந்தமான டியூஎஸ் ஏர்வேஸ் விமான நிறுவனங்களும் டெல் அவிவ் நகரத்துக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளன.
இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரிலுள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து யேமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் விமான நிலையத்திற்குச் சொந்தமான இடங்கள் சேதமடைந்தன.
குறிப்பாக விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தின் அருகேவுள்ள சாலைகள், ஏவுகணைத் தாக்குதலால் பள்ளமாகின.
இதனால், அந்த விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. விமான நிலையத்தின் அனைத்து வாயில்களும் சிறிது நேரத்துக்கு மூடப்பட்டு, விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
தாக்குதல் நடந்தபோது தில்லியில் இருந்து டெல் அவிவ் நகருப்பு புறப்பட்ட விமானம் ஜோர்டான் வான்வெளிப் பரப்பில் இருந்தபோது அபுதாபிக்கு திருப்பிவிடப்பட்டது.
இதையும் படிக்க | இஸ்ரேல் விமான நிலையத்தின் மீது ஹவுதி தாக்குதல்!