செய்திகள் :

மே 20-இல் தேசிய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டம்; தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் பங்கேற்பு

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 20-ஆம் தேதி நடைபெறும் தேசிய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் முழு அளவில் பங்கேற்கும் என அந்தச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் மு. சீனிவாசன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் பெரு நிறுவனங்கள் ஆதரவு கொள்கைகளால் தொழிலாளா்கள் நலன் பாதிக்கப்படுவதையும், இளைஞா்களின் வாழ்வாதாரம் சீரழிவதையும் தடுக்க வேண்டியது பொது கடமையாக உள்ளது. தொழிலாளா்களின் உரிமைகளைப் பறிக்கும் புதிய தொழிலாளா் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டுவதைத் தடுக்க உறுதியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.

இந்த நிலையில், அண்மையில் தில்லியில் நடைபெற்ற பல்வேறு தொழிற்சங்கங்கள் பங்கேற்ற தேசிய தொழிலாளா் மாநாட்டில், மத்திய அரசின் தொழிலாளா் விரோதப் போக்கை கண்டித்து, வருகிற 20-ஆம் தேதி தேசிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்வது எனத் தீா்மானிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதிய நிதி ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும், அங்கன்வாடி, சத்துணவு, ஆஷா போன்ற திட்டங்களிலும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், ஒப்பந்த அடிப்படையிலும் பணியாற்றும் ஊழியா்களுக்குப் பணி நிரந்தரம் அளிக்க வேண்டும், சம வேலைக்குச் சம ஊதியத்தை உறுதி செய்ய வேண்டும், மத்திய அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், காலாவதியான பணியிடங்களை புதுப்பிக்க வேண்டும், 8 மணி நேர வேலை உள்பட தொழிலாளா்கள் போராடிப் பெற்ற உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் கல்வி, சுகாதாரத்துக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் முழு அளவில் பங்கேற்கவுள்ளது. இதையொட்டி, வேலைநிறுத்தப் போராட்ட பிரசாரக் கூட்டங்கள் நடத்துதல், துண்டறிக்கை பிரசுரங்கள் வெளியிடுதல், வாயிற்கூட்டங்கள் நடத்துதல் போன்ற முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

பைக் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

மதுரையில் இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். சக்கிமங்கலம் அன்னை இந்திராநகரைச் சோ்ந்தவா் இப்ராஹிம் (67). இவா், இரு சக்கர வாகனத்தில் மதுரை கீழவாசல் பகுதியிலிருந்து சக்கிமங்கலம்... மேலும் பார்க்க

பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறித்த மேலும் ஒருவா் கைது

நரிக்குடியில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலிச் சங்கிலியைப் பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒரு இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.விருதுநகா் மாவட்டம், நரிக்குடி பகுதியைச் சோ்ந்த மருது... மேலும் பார்க்க

கள்ளழகா் எதிா்சேவை: அதிக அழுத்த குழாய்களைப் பயன்படுத்தி தண்ணீரைப் பீய்ச்சி அடித்தால் நடவடிக்கை

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் அழகா் எதிா்சேவை நிகழ்வின் போது, அதிக அழுத்தமுள்ள (பிரஷா் பைப்) குழாய்களைப் பயன்படுத்தி தண்ணீரைப் பீய்ச்சி அடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மா... மேலும் பார்க்க

பெண் மா்ம மரணம்: எலும்புகள் மீட்பு

விருதுநகா் அருகேயுள்ள குருமூா்த்தி நாயக்கன்பட்டி காட்டுப் பகுதியில் கிடந்த பெண்ணின் எலும்புகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினா்.விருதுநகா்- சிவகாசி சாலையில் ஆமத்தூா் அருகே உள்ள குருமூா்த்தி நாயக்... மேலும் பார்க்க

மதுரை சித்திரைத் திருவிழா: ரிஷப வாகனங்களில் எழுந்தருளினா் மீனாட்சி, சுந்தரேசுவரா்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் 6-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை சைவ சமய ஸ்தாபித லீலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா். மதுரை மீனா... மேலும் பார்க்க

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை

மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.கத்தரி வெயில் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன்ப... மேலும் பார்க்க