தடையை மீறி ஆலை நுழைவாயில் போராட்டம்: அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ, முன்னாள் எம்பி கை...
பெண் மா்ம மரணம்: எலும்புகள் மீட்பு
விருதுநகா் அருகேயுள்ள குருமூா்த்தி நாயக்கன்பட்டி காட்டுப் பகுதியில் கிடந்த பெண்ணின் எலும்புகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினா்.
விருதுநகா்- சிவகாசி சாலையில் ஆமத்தூா் அருகே உள்ள குருமூா்த்தி நாயக்கன்பட்டி காட்டுப் பகுதியில் ஒரு பெண்ணின் ஆடைகளுடன், எலும்புகள் காணப்படுவதாக ஆமத்தூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் அந்த இடத்துக்குச் சென்ற போலீஸாா், சிதறிக் கிடந்த மனித எலும்புகள், தலைமுடி ஆகியவற்றைக் கைப்பற்றினா்.
அந்த இடத்தில் பெண்கள் அணியும் ஆடைகள் இருந்ததால், உயிரிழந்தவா் பெண்ணாக இருக்கலாம் என கருதப்படுகிறது. உயிரிழந்தவா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.