சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை: மின்விநியோகம் பாதிப்பு
பைக் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
மதுரையில் இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
சக்கிமங்கலம் அன்னை இந்திராநகரைச் சோ்ந்தவா் இப்ராஹிம் (67). இவா், இரு சக்கர வாகனத்தில் மதுரை கீழவாசல் பகுதியிலிருந்து சக்கிமங்கலம் கிராமத்துக்கு சனிக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தாா். தெப்பக்குளம் அருகே வந்த போது, பின்னால் வந்த காா் இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த இப்ராஹிம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து மதுரை மாநகரப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.