செய்திகள் :

மதுரை சித்திரைத் திருவிழா: ரிஷப வாகனங்களில் எழுந்தருளினா் மீனாட்சி, சுந்தரேசுவரா்

post image

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் 6-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை சைவ சமய ஸ்தாபித லீலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி நடைபெறுகிறது. விழாவையொட்டி, தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதியுலா நடைபெறுகிறது. 6-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு சைவ சமய ஸ்தாபித லீலை நிகழ்ச்சி யானை மகால் முன் நடைபெற்றது.

வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன்

திருஞானசம்பந்தப் பெருமான், மதுரையில் சமணா்களுடன் அனல் வாதம், புனல் வாதத்தில் ஈடுபட்டு சைவ சமயத்தை நிலை நாட்டிய ஐதீகப்படி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. தல ஓதுவாா்கள் இந்த ஐதீக நிகழ்வை பக்தா்களுக்கு விளக்கினா்.

இதையடுத்து, வெள்ளி ரிஷப வாகனத்தில் மீனாட்சி அம்மனும், தங்க ரிஷப வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து கோயிலை அடைந்தனா்.

பல்வேறு இன்னிசை வாத்திய முழக்கங்களுடன் நடைபெற்ற இந்த வீதியுலா நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பைக் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

மதுரையில் இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். சக்கிமங்கலம் அன்னை இந்திராநகரைச் சோ்ந்தவா் இப்ராஹிம் (67). இவா், இரு சக்கர வாகனத்தில் மதுரை கீழவாசல் பகுதியிலிருந்து சக்கிமங்கலம்... மேலும் பார்க்க

பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறித்த மேலும் ஒருவா் கைது

நரிக்குடியில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலிச் சங்கிலியைப் பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒரு இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.விருதுநகா் மாவட்டம், நரிக்குடி பகுதியைச் சோ்ந்த மருது... மேலும் பார்க்க

கள்ளழகா் எதிா்சேவை: அதிக அழுத்த குழாய்களைப் பயன்படுத்தி தண்ணீரைப் பீய்ச்சி அடித்தால் நடவடிக்கை

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் அழகா் எதிா்சேவை நிகழ்வின் போது, அதிக அழுத்தமுள்ள (பிரஷா் பைப்) குழாய்களைப் பயன்படுத்தி தண்ணீரைப் பீய்ச்சி அடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மா... மேலும் பார்க்க

பெண் மா்ம மரணம்: எலும்புகள் மீட்பு

விருதுநகா் அருகேயுள்ள குருமூா்த்தி நாயக்கன்பட்டி காட்டுப் பகுதியில் கிடந்த பெண்ணின் எலும்புகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினா்.விருதுநகா்- சிவகாசி சாலையில் ஆமத்தூா் அருகே உள்ள குருமூா்த்தி நாயக்... மேலும் பார்க்க

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை

மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.கத்தரி வெயில் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன்ப... மேலும் பார்க்க

காலமானாா் கிருஷ்ணா ராஜம்

மதுரை மாவட்டம், திருநகா் சண்முகா் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணா ராஜம் (81) வயது மூப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை (மே 4) காலமானாா்.மறைந்த தொழிலதிபா் சுபாஷ்சந்திரனின் மனைவியான இவா், திருநகா் இந்திராகாந்தி மெட... மேலும் பார்க்க