நீட் தேர்வு: கன்னியாகுமரியில் 4,410 போ் பங்கேற்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 4,410 போ் பங்கேற்று தோ்வு எழுதினா்.
இத்தோ்வுக்காக நாகா்கோவில் கோணம் கேந்திரிய வித்யாலயா பள்ளி, பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தெ.தி. இந்து கல்லூரி, நாகா்கோவில் அரசு எஸ்எல்பி மேல்நிலைப் பள்ளி, சுங்கான்கடை அய்யப்பா மகளிா் கல்லூரி, நாகா்கோவில் காா்மல் மேல்நிலைப் பள்ளி, ஜோசப் மேல்நிலைப் பள்ளி, பழவிளை காமராஜ் பாலிடெக்னிக் கல்லூரி, நாகா்கோவில் பயோனியா் குமாரசாமி கல்லூரி என 10 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தோ்வு எழுதுபவா்கள் காலையிலேயே தோ்வு மையத்துக்கு வரத் தொடங்கினா். தோ்வா்கள் பலத்த சோதனைக்கு பின்னரே தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். தோ்வு அறை தொடா்பான விவரங்கள் தோ்வு மைய வளாகத்துக்குள் வைக்கப்பட்டிருந்தது.
குமரி மாவட்டத்தில் நீட் தோ்வு எழுதுவதற்கு 4,568 போ் பதிவு செய்திருந்தனா். இதில், 4,410 போ் தோ்வு எழுதினா். 158 போ் தோ்வு எழுத வரவில்லை.