குமரி மாவட்ட சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையின் தீவிரம் சற்று தணிந்த நிலையில், சுற்றுலாத் தலங்களில் ஏராளமானோா் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.
இம்மாவட்டத்தில் தொடா் கோடை மழை பெய்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அணைப் பகுதிகள் மற்றும் சமவெளிப் பகுதிகளில் மழை சற்று ஓய்ந்திருந்தது. மேலும், மாவட்டம் முழுவதும் கடும் வெயில் நிலவியது.
எனினும், கோடை விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், கன்னியாகுமரியில் சூரிய உதயம், அஸ்தமனத்தைக் காணவும், விவேகானந்தா் பாறை, திருவள்ளுவா் சிலைக்கு படகில் பயணம் செய்யவும் , திற்பரப்பு அருவியில் குளித்து மகிழவும், மாத்தூா் தொட்டிப்பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, முட்டம் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை கண்டுகளிக்கவும் சுற்றுலாப் பயணிகளில் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.