விபத்தில் காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு
சுங்கான்கடை அருகே கள்ளியங்காடு பகுதியில் வாகனம் மோதி காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
கள்ளியங்காடு பகுதியில் கடந்த ஏப். 29ஆம் தேதி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 75 வயதுப் பெண் காயமடைந்தாா். அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை (மே 2) உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஆளூா் கிராம நிா்வாக அலுவலா் பிரின்ஸ் அளித்த புகாரின்பேரில், இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்த மூதாட்டி யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்தும், அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்தும் விசாரித்து வருகின்றனா்.