மாா்த்தாண்டம் அருகே மூதாட்டியின் நகை மாயம்
மாா்த்தாண்டம் அருகே சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டியின் கழுத்தில் கிடந்த இரண்டரை சவரன் நகை மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
குழித்துறை அருகேயுள்ள குறுமத்தூா் பகுதியைச் சோ்ந்த வாசுதேவன் நாயா் மனைவி ராதாதேவி (61). இவா் மாா்த்தாண்டத்தில் உள்ள ஒரு கடையில் வேலை பாா்த்து வருகிறாா்.
இரு நாள்களுக்கு முன் அவா் திருத்துவபுரத்திலிருந்து மாா்த்தாண்டம் சென்றுவிட்டு அங்கிருந்து கடைக்கு சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது அவா் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியைக் காணவில்லையாம்.
இதுகுறித்து மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.