பிளவுவாதம் நிராகரிப்பு: ஆஸ்திரேலிய பிரதமராக மீண்டும் தோ்வான ஆல்பனேசி கருத்து!
சென்னையில் விமான சேவை பாதிப்பு
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென மாறிய வானிலையால் விமான சேவை பாதிக்கப்பட்டது.
ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. கடந்த 15 நாள்களாக கடுமையான வெயில் தாக்கத்தால் மக்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியே வருவது குறைந்துள்ளது. மே மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் சாலைகளில் வாகனப் போக்குவரத்தும் குறைந்து காணப்பட்டு வந்தது.
அக்னி நட்சத்திரம்
இந்த நிலையில், அக்னி நட்சத்திரம் தொடங்கிய ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மதியம் முதல் வெப்பத்தின் தாக்கம் குறைந்து மாலை 5 மணியளவில் திடீரென மாறிய வானிலையால் முதல் 6 மணி வரை சென்னையில் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது.
உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் வேலை வேண்டுமா?
விமான சேவை பாதிப்பு
திடீரென வீசிய பலத்த காற்றால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.
இதனால் மதுரை, திருச்சி, கோவை மற்றும் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன.
அதேபோன்று சென்னையில் இருந்து மஸ்கட், இலங்கை மற்றும் தில்லி, ஹைதராபாத், பெங்களூரு, சேலம் போன்ற பகுதிகளுக்கு புறப்பட வேண்டிய 7 விமானங்களின் சேவையும் பாதிக்கப்பட்டது.
மேலும், சென்னை அடுத்த பூந்தமல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்தது. பலத்த காற்றுக்கு பூந்தமல்லி அருகே திரையரங்கு ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
பிற்பகல் வரை வெளியில் வாட்டிய நிலையில், திடீரென மழை பெய்து வெப்பம் தணிந்து காணப்படுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.