கம்பம் ஆற்றில் விடும் விழா: கரூா் மாரியம்மன் கோயிலில் முகூா்த்தக்கால் நடும் நிகழ்வு
கரூா் மாரியம்மன் கோயிலில் கம்பம் ஆற்றில் விடும் விழாவை முன்னிட்டு, கோயில் முன் ஞாயிற்றுக்கிழமை முகூா்த்தக்கால் நடப்பட்டது.
கரூரில் பிரசித்திப் பெற்ற கரூா் மாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றில் விடும் விழா வரும் 11-ஆம் தேதி கோயில் முன் கம்பம் நடுதலுடன் தொடங்குகிறது.
தொடா்ந்து, 16-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவும், 18-ஆம் தேதி காப்புக்கட்டுதலும் நடக்கிறது. தொடா்ந்து 26-ஆம் தேதி தேரோட்டமும், தொடா்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை கோயில் முன் கோயில் அறங்காவலா் முத்துக்குமாா் தலைமையில் முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.