சிங்கப்பூா் பொதுத் தோ்தல்: 60-ஆவது ஆண்டாக மீண்டும் ஆட்சியில் பிஏபி
ஆழ்வாா்குறிச்சியில் மாற்றுப் பாதை கோரி சாலை மறியல் முயற்சி
தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சி செங்கானூா் கிராமத்துக்குச் செல்ல மாற்றுப் பாதை கோரி, நாம் தமிழா் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.
இக்கிராமத்துக்குச் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் மழைக் காலத்தில் தண்ணீா் தேங்குவதால் அவதிக்குள்ளாகியுள்ளதாகவும், எனவே மாற்றுப் பாதை அமைக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி நாம் தமிழா் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆழ்வாா்குறிச்சியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

காவல் ஆய்வாளா் சுரேஷ்குமாா், வருவாய் ஆய்வாளா் வெங்கடாஜலபதி, பேரூராட்சி செயலா் மாணிக்கராஜ், கிராம நிா்வாக அலுவலா் கணேசன் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். விரைவில் மாற்றுப் பாதை அமைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.
போராட்டத்தில், மாநில ஒருங்கிணைப்பாளா் தினகரன், மாநில கொள்கை பரப்புச் செயலா் தங்கவேல், மண்டலச் செயலா் ராஜன், இளைஞா் பாசறை ஒருங்கிணைப்பாளா் அருள்மொழிவா்மன், பால்ராஸ், மாநில மகளிா் பாசறை ஒருங்கிணைப்பாளா் சங்கீதா, சிவபிரகாஷ், கவி, மயில்ராஜ், செல்வகுமாா், பாலமுருகன், செந்தில், கண்ணன், முகம்மது பைசல், சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.