மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது: என்சிஇஆா்டி கூட்டத்தில் தமிழக அரசு
அங்கன்வாடி ஊழியர்கள் 2-வது நாளாகப் போராட்டம்!
மே மாதம் முழுவதும் விடுமுறை கோரி அங்கன்வாடி ஊழியர்கள் 2-வது நாளாக பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று(வெள்ளிக்கிழமை) முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று காலை தொடங்கிய போராட்டம் இன்று 2 ஆவது நாளாகத் தொடர்கிறது. நேற்று இரவும் பல பகுதிகளில் ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து இன்றும் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தலையில் முக்காடு போட்டு, ஒப்பாரி வைத்து நூதன முறையில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோன்று திருப்பூரிலும் அங்கன்வாடி ஊழியர்கள் கும்மியடித்தும் ஒப்பாரி வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, அரசு ஏழை, எளிய குழந்தைகளின் நலனுக்காக, அவர்களுக்கு தொடர்ந்து ஊட்டச்சத்து வழங்குவதை உறுதி செய்வதற்காக, முறையற்ற போராட்டங்களில் ஈடுபடும் குழந்தைகள் மையப் பயணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கீதாஜீவன் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
போராடும் அங்கன்வாடி பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: அமைச்சர் கீதாஜீவன்