திமுக பொதுக்குழுக் கூட்டம் எப்போது? - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
மதுரையில் ஜூன் 1 ஆம் தேதி திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று(சனிக்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், திமுக பொதுக்குழு கூட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து மதுரையில் வருகிற ஜூன் 1 ஆம் தேதி திமுக பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | போப் உடையில் டிரம்ப்! - வைரலாகும் புகைப்படம்