நத்தம் அருகே நடந்த மீன் பிடித் திருவிழாவில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
பழைய ஓய்வூதியத் திட்டத்தை வலியுறுத்தி மே 12-இல் இருசக்கர வாகனப் பேரணி
நாகை மாவட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி மே 12- ஆம் தேதி இருசக்கர வாகனப் பேரணி நடைபெறும் என சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக, அந்த இயக்கத்தின் நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் இணையவழிக் கூட்டம் மாவட்ட தொடா்பாளா் பாலசண்முகம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளா் பி. பிரடெரிக் எங்கல்ஸ் கலந்துகொண்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி மே 12-ஆம் தேதி நடைபெறும் இருசக்கர வாகனப் பிரசாரம் குறித்து விளக்கிக் கூறினாா்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் அரசமணி, புஷ்பராஜ், வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் சுத்தானந்த கணேஷ், தியாகராஜன், செந்தில்வேலன், சாந்தி, ஒருங்கிணைப்பாளா் எம்.ஆா். சுப்பிரமணியன் உள்ளிட்ட பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.
மே 12-ஆம் தேதி நாகை மாவட்ட எல்லையான கூத்தூரில் தொடங்கி கீழ்வேளூா், சிக்கல், நாகை நகரம் வழியாக பனங்குடி வரை இருசக்கர வாகனப் பேரணி நடைபெறும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.