நத்தம் அருகே நடந்த மீன் பிடித் திருவிழாவில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
நத்தம் அருகே எட்டையம்பட்டி கிராமத்தில் நடந்த மீன் பிடித் திருவிழாவில் 1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சிக்கு உட்பட்ட எட்டையம்பட்டி கிராமத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் பெரிய கண்மாய் உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் கண்மாயில் நீர் வற்றியவுடன் ஊர் சார்பில் மீன் பிடித் திருவிழா நடத்துவது வழக்கம்.
தற்போது கண்மாயில் நீர் குறைந்ததால் மீன் பிடித் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு செய்யப்பட்டது.
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பிரதமர் மோடி - விமானப்படை தளபதி சந்திப்பு!
அதனைத்தொடர்ந்து நத்தம், சிறுகுடி, கொட்டாம்பட்டி, மற்றும் வெளி மாவட்டங்களான சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களிலிருந்து சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் மீன்பிடித் திருவிழாவில் கலந்துகொண்டு ஊத்தா மீன் பிடி கூடையை கொண்டு மீன்களைப் பிடித்தனர்.
இதில் ஜிலேபி, குரவை, ரோகு, பாப்லெட் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் கிடைத்தது. மீன் பிடி பிரியர்களுக்கு மட்டும் 2 கிலோ முதல் 5 கிலோ எடை வரை மீன்கள் கிடைத்தன.