செய்திகள் :

நடிகை பெருமாயி காலமானார்!

post image

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அன்னம்பாரிபட்டியைச் சேர்ந்தவர் நடிகை பெருமாயி. 73 வயதான இவர் இயக்குநர் பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு சீரியல் மூலம் பிரபலமாகி, பின்னர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயனின் மனம் கொத்தி பறவை, விஜய்யின் வில்லு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் 30க்கும் மேற்பட்ட கிராமப்புறம் சார்ந்த திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

இறுதியாக நடிகர் பசுபதியின் தண்டட்டி படத்தில் நடித்த இவர் உடல்நலக் குறைவு காரணமாக சமீபகாலமாக திரைப்படங்களில் நடிக்கமால் இருந்தார்.

இந்நிலையில் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். இவருக்கு ஒரு மகனும், மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர்.

அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டுள்ள சூழலில், பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஆன்லைன் விமர்சனங்களை இனிமேல் படிக்கமாட்டேன்: கார்த்திக் சுப்புராஜ்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இனிமேல் ஆன்லைனில் வரும் விமர்சனங்களைப் படிக்கப்போவதில்லை எனக் கூறியுள்ளார்.நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் மே.1ஆம் தே... மேலும் பார்க்க

நெட்பிளிக்ஸால் இந்தியாவில் 2 பில்லியன் டாலர் வருமானம்!

நெட்பிளிக்ஸ் ஓடிடியினால் இந்தியாவில் 2 பில்லியன் டாலர் (அளவுக்கு பொருளாதார இலாபம் அடைந்துள்ளதாக அதன் இணை தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார். முதல்முறையாக உலக ஆடியோ விடியோ என்டர்டெயின்மென்ட் சந்திப்பு ... மேலும் பார்க்க

தினமும் உயரும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் டிக்கெட்டுகள்..! முதல் நாளைவிட மும்மடங்கு உயர்வு!

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மே.1ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகிய... மேலும் பார்க்க

மாட்ரிட் ஓபனில் 3-ஆவது முறையாக பட்டம் வென்ற சபலென்கா..!

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிப் போட்டியில் பெலாரஸின் அரினா சபலென்கா பட்டம் வென்று அசத்தினார். போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பெலாரஸின் அரினா சபலென்கா தரவர... மேலும் பார்க்க

ஹிட்ச்காக் இருதயராஜ்... டிடி நெக்ஸ்ட் லெவல் அப்டேட்!

சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் செல்வராகவன் கதாபாத்திர அறிமுக விடியோ அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் டிடி ரிட்டன்ஸின் அடுத்த பாகமான டிடி நெக்ஸ்ட் லெவல் (DD next level) படத்தி... மேலும் பார்க்க

ரூ.100 கோடியை நெருங்கும் ஹிட் 3!

நானி நடிப்பில் வெளியான ஹிட் 3 திரைப்படம் வசூலில் கலக்கி வருகிறது.தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நானியின் நடிப்பில் கடைசியாக வெளியான சரிபோத சனிவாரம் (சூர்யாவின் சனிக்கிழமை) திரைப்படம் ரூ. 100 கோட... மேலும் பார்க்க