TN Rain: 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல் என்ன?
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
கடந்த சில தினங்களாக கோடை வெயில் அதிகரித்து இருக்கிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.

இதனிடையே இன்று(மே 4) பிற்பகல் சுமார் 3 மணி அளவில் சென்னையில் வானிலை மாறி மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் மழைத் தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அந்த அறிவிப்பில் , " சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மாலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இந்த மாவட்டங்களில் மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். மேலும், நீலகிரி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs